டெக்னாலஜியா.. வாட்ஸப்பில் ஹைடெக் விபச்சாரம்.. பலே புரோக்கர் கைது.! 



Hi-Tech Prostitution Racket Busted: WhatsApp Broker Arrested in Chennai

பாலியல் தொழிலை நடத்தி வந்த இளைஞரை கைது செய்த அதிகாரிகள், 2 பெண்களை மீட்டனர். 

புரோக்கர்:

சென்னையில் உள்ள எழும்பூர், தமிழ் சாலை பகுதியில் செயல்படும் தனியார் விடுதியில், வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் அறையெடுத்து தங்கி இருக்கின்றனர். இவர்கள் லாட்ஜில் தொடர்புகொள்ள கொடுக்கப்படும் செல்போன் நம்பர் மூலம் பாலியல் புரோக்கர் தொடர்பு கொள்வதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க: வாட்சப்பில் போட்டோ அனுப்பி ஹைடெக் விபசாரம்.. சென்னையில் வடமாநில புரோக்கர் கும்பல் கைது.!

வாட்சப்: 

மேலும், புரோக்கராக இருக்கும் நபர் வாட்சப்பில் பெண்களின் போட்டோவை அனுப்பி பாலியல் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருக்க அழைப்பு விடுப்பதாகவும் விபச்சார தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

chennai

விசாரணை: 

இதனையடுத்து, இந்த தகவலின் பேரில் நடந்த விசாரணைக்குப்பின், லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, முதல் மாடியில் இருக்கும் அறையில் 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வந்தது தெரியவந்தது. இந்த செயலில் ஈடுபட்ட ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஜெயக்குமார் (வயது 39) கைது செய்யப்பட்டார். 

பெண்கள் மீட்பு: 

அவரிடம் பாலியல் தொழிலாளியாக இருந்த 2 பெண்களை மீட்ட அதிகாரிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 3 ஸ்மார்ட்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதையும் படிங்க: ஓட்டலில் நடந்த திடீர் சோதனை.. அந்த கோலத்தில் மீட்கப்பட்ட 2 நடிகைகள்.. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஷாக் செயல்.. திரைத்துறையில் பரபரப்பு.!