வாடிவாசலில் காளையர்களை மிரட்டும் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு கொம்பன் காளைகள்.! அமைச்சரிடம் காட்டும் பாசத்தை பாருங்கள்.!health-minister-vijayabaskar-komban-bull

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற ஊர் அலங்காநல்லூர் என்றாலும், தமிழகத்திலேயே அதிகபடியான வாடிவாசல் கொண்ட மாவட்டம் என்றால் அது புதுக்கோட்டை தான். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல கிராமங்களில் விவசாயிகள் தங்களது வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது பிள்ளைகளை போலவே பாதுகாத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம்  விராலிமலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்தர்.

jallikattu

இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஐந்து மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக இருந்ததாகவும், கடந்த வருடம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்1353 மாடுகள் வாடிவாசலை கடந்து உலக சாதனையை படைத்து புதுக்கோட்டைக்கு புகழ் கிடைத்தது. புதுக்கோட்டையின் ஜல்லிக்கட்டு நாயகன் என்று அமைச்சர் விஜயபாஸ்கரை அப்பகுதி மக்கள் கூறுவார்கள். ஏனென்றால் ஜல்லிக்கட்டு மீது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அளவுகடந்த பற்று அதிகம்.

jallikattu

அமைச்சர் விஜயபாஸ்கரும் கொம்பன் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். அவரது காளைகளும் ஜல்லிக்கட்டில் பல பரிசுகளை தட்டிச்சென்று சிறந்த காலை என்ற புகழையும் பெற்றது. இந்தநிலையில் சமீபத்தில் அவர் வளர்க்கும் காளைகளுக்கு விஜயபாஸ்கர் பாசத்துடன் உணவு கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டில் கம்பீரத்துடன் காளையர்களை மிரட்டும் அமைச்சரின் கொம்பன் காளைகள் அவரிடம் பாசத்துடன் உணவை வாங்கி சாப்பிடுகிறது.