என் பேத்திக்கா செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறா? ஓடஓட விரட்டி வெட்டிய பாட்டி.. கரூரில் கறார் சம்பவம்.! 



Grandmother Chases and Attacks Man Accused of Sexually Harassing Her 8-Year-Old Granddaughter in Karur

பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகனை பாட்டி ஓடஓட விரட்டி வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. 

கட்டிட தொழிலாளி: 

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, வைத்தியநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 42). இவர் கட்டிட தொழிலாளி ஆவார். திருமணம் முடிந்து மனைவி இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். 

இதையும் படிங்க: "பதவி வேண்டுமா? வாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" - தவெக நிர்வாகிக்கு எதிராக பெண் பகீர் புகார்.! 

பாலியல் தொல்லை: 

இதனால் கட்டிட தொழிலாளி மாணிக்கம் தற்போது தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று உறவினர் மகளான 8 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்ற மாணிக்கம், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

உறுதி: 

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், குற்றவாளியின் பெயர் மற்றும் விபரம் தெரியாததால் சிறுமிக்கு யார் என கூறத்தெரியவில்லை. பின் சிறுமி தெரிவித்த தகவலின் பேரில் மாணிக்கம் தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது என்பது தெரியவந்தது. 

Karur news

தகவல்: 

இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணிக்கத்தை பல இடங்களில் தேடி வந்த நிலையில், இன்று மதியம் அங்குள்ள கிராமத்தில் அவர் வேலை பார்த்து வருவதாக சிறுமியின் தந்தை மற்றும் பாட்டிக்கு தகவல் தெரியவந்தது. 

சரமாரி வெட்டு: 

இருவரும் அங்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், மாணிக்கத்தை தாக்கி காவல் நிலையம் அழைத்துச்செல்ல முற்பட்டனர். அச்சமயம், சிறுமியின் பாட்டி மாணிக்கத்தை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்றார். 

விசாரணை: 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணிக்கத்தை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: டூவீலரில் பின்தொடர்ந்து தினமும் இதே வேலை.. ஊரே கூடி செய்த வேலை.. சிக்கிய காமுகன்.!