மதுரை மணமணக்க.. 125 ஆடுகள் பலி.! ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வினோத திருவிழா.!



grand-non-veg-feast-festival-where-men-only-participate

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கரும்பாறை முத்தையா கோவில். அந்த கோவிலில் இன்று அசைவ உணவுத் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர்.

கருப்பசாமிக்கு கருப்பு ஆடுகள் 

வருடந்தோறும் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய நிலையில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கருப்பசாமிக்கு கருப்பு ஆடுகள் வழங்குவர். அதனை திருவிழாவன்று பலி கொடுப்பர். இந்த நிலையில் இன்று காலை திருவிழா தொடங்கியது. கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு தொடங்கப்பட்ட பின்னர் ஆடுகள் பலியிடப்பட்டது.

இதையும் படிங்க: ரம்மியமாய் காட்சிதந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளம்; மழையின் போது காணக்கிடைக்காத காட்சி உள்ளே.!

Feast

ஆண்களுக்கு மட்டும் கறிவிருந்து 

கருப்ப சாமிக்கு 125 ஆடுகள் பலியிடபட்டு, 2500 கிலோ அரிசியில் அன்னதான உணவு சமைக்கப்பட்டது. பின்னர் உணவு, இறைச்சி சாமிக்கு படைத்து பூஜை செய்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கறிவிருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டுள்ளனர். விருந்தில் வாழை இலையில் சாதமும், ஆட்டுகறி குழம்பும் பக்தர்களுக்கு பரிமாறப்படுகிறது. 

பெண்கள் தரிசனம் 

பின் அவர்கள் சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கமாம். ஒரு வாரத்திற்கு பின்னர் அந்த இலைகள் காய்ந்த பிறகு பெண்கள் கோவிலில் தரிசனத்திற்கு செல்வர். இந்த கறிவிருந்து திருவிழாவில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, செக்கானூரணி, சோழவந்தான், கருமாத்தூர், செல்லம்பட்டி என பல கிராமத்தை சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: #Breaking: மதுரை, தேனி உட்பட 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.!