தாய்மார்கள் கவனத்திற்கு.... இந்த எண் இல்லையென்றால் குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம் கிடையாது..! எந்தெந்த ஆவணங்கள் தேவை? முழு விவரம் இதோ...!!!



government-hospitals-gold-ring-scheme-children

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் புதிய தகுதி நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகள் இந்தச் சலுகைக்கு தகுதியுடையவர்கள். இதற்காக குழந்தையின் தாய் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

தாய்க்கு PICME எண் கட்டாயம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பம் தரித்தது முதல் மருத்துவ சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்ட PICME எண் கட்டாயமாகும். அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுவதுடன், திட்டத்திற்கான அடிப்படை தகுதிகளையும் தாய் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: மகிழ்ச்சியில் தமிழகம்!! சொன்னதை செய்த த.வெ.க அரசு!! வைரலாகும் வீடியோ..

எந்த ஆவணங்கள் தேவை?

திட்டத்தின் நன்மையைப் பெற குடும்ப ரேஷன் கார்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் மருத்துவமனையில் வழங்கப்படும் Discharge Summary ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே திட்டத்தின் கீழ் சலுகை வழங்கப்படும்.

முதல் 2 குழந்தைகளுக்கு முன்னுரிமை

குடும்பத்தின் முதல் இரண்டு குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள குடும்பங்கள் தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பதுடன், PICME பதிவு தொடர்பான விவரங்களையும் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

 

இதையும் படிங்க: மகிழ்ச்சியில் தமிழகம்!! சொன்னதை செய்த த.வெ.க அரசு!! வைரலாகும் வீடியோ..