மகிழ்ச்சியில் தமிழகம்!! சொன்னதை செய்த த.வெ.க அரசு!! வைரலாகும் வீடியோ..



thaymaman-gold-ring-scheme-madurai-rajaji-hospital

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று  (28-ந்தேதி) தொடங்கப்படுகிறது. த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இந்த திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

மதுரையில் நாளை தொடக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு

இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்! 5 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை! பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில் நடந்த கொடுமை... மதுராந்தகத்தில் நடந்த அதிர்ச்சி!!!

107 அரசு மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு

தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சார்பில் வழங்கப்படும் சீரை பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டத்துக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோதிரம் தயாரிக்கும் வீடியோவை முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 107 அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படும். அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

இதையும் படிங்க: முதல் மனைவி ஓடி போனதாக கணவன் நம்பவைத்த நாடகம்! 2-வது மனைவியுடன் ஜாலியாக வாழ்ந்த வாழ்க்கை..! கொழுந்தியாவுக்கு வந்த அந்த ஒரு சந்தேகத்தால்... விசாரணையில் தெரிந்த அடுக்கடுக்கான உண்மைகள்..!!!