தமிழகம் லைப் ஸ்டைல்

2020 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியல்! முழு விவரம் இதோ!

Summary:

Government holidays in tamilnadu 2019

பொதுவாக விடுமுறை என்றாலே பள்ளி சிறுவர்கள் தொடங்கி, கல்லூரி மாணவர்கள், தினமும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் வரை அனைவர்க்கும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். அதுவும் அரசு விடுமுறை என்றால் சற்று கூடுதல் மகிழ்ச்சிதான்.

அந்த வகையில் பிறந்திருக்கும் இந்த 2020 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விடுமுறை விவரம் இதோ .
 

நாள் கிழமை விழா
ஜனவரி 1  புதன்கிழமை  ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15  புதன்கிழமை  பொங்கல்
ஜனவரி 16  வியாழக்கிழமை  திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17  வெள்ளிக்கிழமை  உழவர் திருநாள்
ஜனவரி 26  ஞாயிற்றுக்கிழமை  குடியரசு தினம்
மார்ச் 25  புதன்கிழமை  தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1  புதன்கிழமை  வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
ஏப்ரல் 6  திங்கட்கிழமை  மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 10  வெள்ளிக்கிழமை  புனித வெள்ளி
ஏப்ரல் 14  செவ்வாய்க்கிழமை  தமிழ்ப் புத்தாண்டு
மே 1  வெள்ளிக்கிழமை  மே தினம்
மே 25  திங்கட்கிழமை  ரம்ஜான்
ஆகஸ்டு 1  சனிக்கிழமை  பக்ரீத்
ஆகஸ்டு 11  செவ்வாய்க்கிழமை  கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்டு 15  சனிக்கிழமை  சுதந்திர தினம்
ஆகஸ்டு 22  சனிக்கிழமை  விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்டு 30  ஞாயிற்றுக்கிழமை  மொகரம்
அக்டோபர் 2  வெள்ளிக்கிழமை  காந்தி ஜெயந்தி
அக்டோபர் 25  ஞாயிற்றுக்கிழமை  ஆயுதபூஜை
அக்டோபர் 26  திங்கட்கிழமை  விஜயதசமி
அக்டோபர் 30  வெள்ளிக்கிழமை  மிலாது நபி
நவம்பர் 14  சனிக்கிழமை  தீபாவளி
டிசம்பர் 25  வெள்ளிக்கிழமை  கிறிஸ்துமஸ்

Advertisement