சற்றுமுன்: பயங்கர விபத்து! அரசுப்பேருந்து லாரி மீது மோதல்! ஏழுபேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

சற்றுமுன் ஓசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்து சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடாகுறிக்கி பகுதியில் முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TN25 N 0434 என்ற பதிவெண் கொண்ட தமிழக அரசுப்பேருந்து ஓசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடாகுறிக்கி என்ற பகுதியை பேருந்து நெருங்கியபோது முன்னாள் சென்ற லாரிமீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் ஒருபகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணம்செய்த 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இதில் ஒருவர் அப்பயகடத்தில் இருப்பதாகவும் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.