இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும்.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும்.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?


gold rate increased

கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது. கொரோனா சமயத்தில் ஒருசவரன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் நெருங்கி அதிர்ச்சியை அளித்தது.

தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்து வந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

gold rate

இந்தநிலையில், தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,120-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து, ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 77.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.