ஆத்தாடி... மீண்டும் ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம்.!

ஆத்தாடி... மீண்டும் ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம்.!


gold rate increased

கொரோனா சமயத்தில் பலரும் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வந்தது. கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. 

இந்தநிலையில் சமீபத்தில் நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 

gold rate

தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி வரை லேசாக விலை குறைந்த நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மீண்டும் விலை அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,387 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,096 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,746 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 37,968 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 72.10 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.72,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.