காதலை ஏற்க மறுத்த குடும்பம்.. திருமணம் கேட்டு வந்த இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி!



Girlfriend mother attack lover in ranipet

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில், தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட இளைஞரின் முகத்தில் காதலியின் தாய் சூடான எண்ணெயை ஊற்றியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞரும், 18 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு லோகேஷ் தனது காதலியின் வீட்டுக்கு சென்று, அவரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளம்பெண்ணின் தாய் லோகேஷின் முகத்தில் சூடான எண்ணெயை ஊற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டை.. ஓடும் காரில் மாறி-மாறி சதக்., சதக்.. பறிபோன உயிர்.!  

Ranipet

இதில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயமடைந்த லோகேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் தாய் மீது காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் கேட்டு வந்த இளைஞரின் முகத்தில் காதலியின் தாய் சூடான எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள்! சிலை கரைப்புக்கும் புதிய விதிமுறைகள்!