தமிழகம்

மாணவிகள் இனி பள்ளிகளில் கொலுசு அணிய கூடாது! அமைச்சர் செங்கோட்டையன்!

Summary:

Girl students restricted to wear anklet in school

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன் மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாணவிகள் கொலுசு அணிவதால் அதன்மூலம் வரும் சத்தத்தின் மூலம் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படும் எனவும், அதனால் அவர்களது படிப்பு பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து என் கவனத்திற்கு வரவில்லை என கூறியுள்ளார்.


Advertisement