இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
சரவணா ஸ்டோரில் ஆசையாக டிரஸ் எடுத்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சிசிடிவியால் அம்பலமான உண்மைகள்!
தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது, மேலும் இந்த நெரிசலான சூழ்நிலையை பயன்படுத்தி திருட்டும் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்த யமுனா என்பவர் நேற்று மாலை புரசைவாக்கத்தில் அமைத்துள்ள பிரபல கடையான சரவணா ஸ்டோரில் துணி எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் துணி எடுத்துவிட்டு, பணத்தை கட்டுவதற்காக தனது பையில் உள்ள பர்ஸை தேடியுள்ளார்.ஆனால் பர்ஸ் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த யமுனா இதுகுறித்து கடை மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது அங்கு இளம்பெண் ஒருவர் யமுனாவின் அருகில் நின்று அவரின் பர்சை திருடி சென்றது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அந்தஇளம்பெண் கடையிலேயே சுற்றி திரிவதைக் கண்ட கடை ஊழியர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் வியாசர்பாடியை சேர்ந்த திவ்யா என்பது தெரியவந்தது மேலும் அவரிடமிருந்து 2770 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.