மளிகை கடைக்கு சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம்..!!



girl-raped-by-31-years-old-men-in-salem

சேலத்தில் உள்ள கருப்பூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் மளிகை கடைக்கு சென்று உள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அந்தப் பெண் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ஒன்று கூடி பெண்ணை தேடி வந்துள்ளனர். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்னும் 31 வயது ஆண் இளம்பெண்ணை முட்கள் நிறைந்த புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மணிகண்டனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.