காதலன் தற்கொலை செய்துகொண்டதால் காதலி செய்த அதிர்ச்சி சம்பவம்!.



girl friend doing shocked incident in lover funeral

காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால், துக்கம் தாங்காமல் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பனையன்குளத்தைச் சேர்ந்தவர்  மகாலிங்கம். இவரது மகன் ரத்தினகுமார். 20 வயது நிரம்பிய இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவர் மூலைக்கரைப்பட்டி அருகே தெய்வ நாயகப்பேரியை சேர்ந்த சுதா எனும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

சுதா திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் உள்ள கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சுதாவின் பெற்றோர் அவருக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ரத்தினக்குமார், கடந்த 10-ஆம் தேதி நாங்குநேரி அருகே  ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி சுதாவிற்கு தெரியவந்ததால், அவர் காதலனின் வீட்டிற்கு சென்று இறுதிச்சடங்கில் ரத்தினக்குமாரை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதைக் கண்ட ரத்தினகுமாரின் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பியுள்ளனர். இருப்பினும் காதலன் இறந்த வேதனையில் இருந்த சுதா அவரை மறக்க முடியாமல் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.