மலைப்பாம்பிற்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பெண்! காரணம் என்ன தெரியுமா?

மலைப்பாம்பிற்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பெண்! காரணம் என்ன தெரியுமா?


Girl did aarathi to malaipambu

பொதுவாக நாம் முக்கிய சுப நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினருக்கு ஆரத்தி எடுப்பது வழக்கம். தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆனால் வாணியம்பாடி அருகே சங்கராபுரம் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்றிற்கு ஆரத்தி எடுத்து எடுத்த சம்பவம் அனைவரையாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த நசீர் என்பவர் தனது தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். 

சம்பவத்தன்று கோழி ஒன்று அலறும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது 10 அடி நீளமுள்ள பெரிய மலைபாம்பு ஒன்று கோழியை மடக்கி பிடித்து விழுங்க முயன்று கொண்டிருந்தது. 

Aarathi

உடனே பக்கத்து ஊரை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞரான இலியாஸ் கான் என்பவரை அங்கு வரவழைத்தனர். வேகமாக சென்ற மலைப்பாம்பை இலியாஸ் துரதத்தி பிடித்தார். 

இலியாஸ் கான் மலைபாம்பை பிடித்து தூக்கி வந்ததும் அந்த பகுதி பெண் ஒருவர், நல்லா இருப்ப நாகராசா, இனிமேல் இந்த பக்கம் வராதே எனவும் தங்களுக்கும், தாங்கள் வளர்க்கின்ற கால் நடைகளுக்கும் எந்த வித ஆபத்தையும் ஏற்படுத்தி விடாதே எனவும் வேண்டி மலை பாம்புக்கு ஆரத்தி எடுத்தார்.