தமிழகம் காதல் – உறவுகள்

திருமணமான 3 நாளிலேயே, காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த காரியம்! இறுதியில் நேர்ந்த பரிதாபம்!

Summary:

girl commit suicide with lover

விருதுநகர் மாவட்டம் காலபெருமாள்பட்டியில் வசித்து வந்தவர் முருகன்.இவரது மகள் ரஞ்சிதா. இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சிதா மனோஜ் பாண்டியன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

அனால் இவர்களது காதல் விவகாரம் ரஞ்சிதாவின் பெற்றோர்க்கு தெரியவந்தநிலையில் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அதுமட்டுமின்றி ரஞ்சிதாவை அவரது உறவுக்கார வாலிபர் ஒருவருக்கு அவசரஅவசரமாக கடந்த 13-ந் தேதி  திருமணம் செய்து வைத்தனர். 

ஆனாலும் தனது காதலனை மறக்க முடியாமல் தவித்துவந்த ரஞ்சிதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய தனது காதலன் மனோஜ் பாண்டியனுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு மலை அடிவாரத்துக்கு சென்றுள்ளார். அங்கு காதலர்கள் இருவரும் வி‌‌ஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளனர். இந்நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்த அவர்களை அப்பகுதி வழியே சென்றவர்கள் மேடு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ரஞ்சிதா சிகிச்சை பலனின்றிபரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மனோஜ் பாண்டியனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement