சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு! உச்சகட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு! உச்சகட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள்!


gas-price-decreased

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படும். சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்தநிலையில் 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு, 590 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதுகுறித்து இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை புதன்கிழமை நள்ளிரவு முதல் ரூ.62.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட  சிலிண்டர் விலை ரூ.574.50ஆக இருக்கும்.

gas cylinder

மேலும், இந்த மாத தொடக்கத்திலும் எல்பிஜி விலை ரூ.100.50 குறைக்கப்பட்டது. அதையும் சேர்த்து கணக்கிட்டால், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மொத்தம் ரூ.163 குறைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் வீட்டு உபயோக சிலிண்ட ருக்கான மானியம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.