விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
சரவணபவன் உரிமையாளர் வழக்கில் நடந்தது என்ன? முழு விவரம் இதோ?
இன்று தமிழகம் மட்டும் இல்லது உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டது சரவணபவன் உணவகம். உலகம் முழுவதும் பறந்து விரிந்துள்ள இந்த உணவகத்திற்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் உண்டு. இந்த அளவிற்கு புகழ் பெற்ற சரவணபவன் உணவகத்தின் உரிமையாளரான ராஜகோபாலை குற்றவாளி என கூறி உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டை வழகியுள்ளது.
அப்படி என்ன நடந்தது? என்ன குற்றத்திற்காக ஆயுள் தண்டனை? முழு விவரம். சரவணபவன் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவா ஜோதி என்பவருக்கும், ராஜகோபாலுக்கும் தவறான உறவு இருந்ததாகவும், ஜீவா ஜோதியை ராஜகோபால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டதாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜீவா ஜோதிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து பிரின்ஸ் சாந்தகுமார் என்ற கணவர் உள்ளார். சாந்தகுமாரும் சரவணபவனில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆசைப்பட்ட பெண்ணை அடைய சாந்தகுமார் இடையூறாக இருந்தததால் ராஜகோபால் சாந்தகுமாரி ஆள் வைத்து கொன்றுவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ராஜகோபால் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமதின்றதில் மேல்முறையிடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் ராஜகோபால் மீதான தண்டனையை உறுதி செய்து இன்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.