சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிக்கும் மே 31 வரை இலவச உணவு..! அமைச்சர் வேலுமணி தகவல்..!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிக்கும் மே 31 வரை இலவச உணவு..! அமைச்சர் வேலுமணி தகவல்..!


Free food in chennai amma hotel up to may 31st

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் வரும் மே 31 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த 50 நாட்களும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் செயல்பட்டுவந்தன. குறிப்பாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

Amma hotel

உணவு இலவசமாக வழங்கப்படுவது இன்றுடன் நிறுத்தப்பட்டு, கட்டணம் வசூலிக்க போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் வேலுமணி, சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் வரும் மே 31 வரை இலவசமாக உணவு வழங்கப்படுவது தொடரும் என அறிவித்துள்ளார்.