என்.எல்.சிக்கு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை; மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..!
என்.எல்.சிக்கு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை; மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..!

என்.எல்.சி. பணி நியமனம் தொடர்பாக பாரத பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தற்போது நெய்வேலி என்.எல.சியில் பணி நியமனம் நடந்து வருகிறது. அது குறித்து தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், என்.எல்.சி.பயிற்சி பட்டதாரி பொறியாளர் வேலைக்கான தேர்வில் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்மேலும், என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களின் விண்ணப்பதாரர்களை சிறப்பு தேர்வின் மூலம் நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என வலியுறுத்தி இருக்கிறார். இந்த விஷயத்தில் பிரதமர் தமிழகத்திற்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.