வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பெண்! மர்மமான முறையில் மரணமடைந்த பகீர் சம்பவம்..



flower-seller-found-dead-in-koyambedu-chennai

சென்னை கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்த தனலட்சுமி (வயது 50) என்பவர், அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பூ வியாபாரம் செய்துவந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு சென்றபோது, 100 அடி சாலையில் நடந்தபோது எதிர்பாராதவிதமாக கால் இடறி விழுந்து, தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் காயத்தையடுத்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார். ஆனால், இரண்டு நாட்கள் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனலட்சுமி நிர்வாணமாக மரணம் அடைந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுபற்றி உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இதையும் படிங்க: என் புருஷன் சாகல! இன்னும் கொஞ்சம் கொடுக்கவா? கள்ளகாதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி செய்த அதிர்ச்சி செயல்! வைரலாகும் ஆடியோ!

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தனலட்சுமி தலையில் அடிபட்டதால் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

பிரேத பரிசோதனையின் முடிவை அடுத்து மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 6 வருஷங்களாக 14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கை! பெற்ற தாயே செய்ய கூடாததை மகளிடம் செய்த கொடூரம்! வெளிவந்த பகீர் உண்மை..