300 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய கார்.. 3 பேர் பரிதாப பலி.. நொடியில் அரங்கேறிய சோகம்.! 



Nilgiris Car Accident: Car Plunges 300 Feet Into Gorge, 3 Killed on the Spot

துக்க வீட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 

உறவினர்கள்: 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, பெங்கால் மட்டம் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜ் கண்ணன் (வயது 54), போஜன் (வயது 70), ராதிகா (வயது 55). இவர்கள் அனைவரும் தற்போது கோவையில் உள்ள காரமடை, மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: ஆம்னி பேருந்து - கார் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பரிதாப பலி.! 

துக்கவீடு: 

நேற்று முன்தினம், இவர்கள் மூவரும் ஊட்டி, எடக்காட்டில் இருக்கும் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். காரை ராஜ் கண்ணன் இயக்கி இருக்கிறார். பின் அங்கிருந்து மாலை நேரத்தில் புறப்பட்டு, மஞ்சூர், முள்ளி வழியாக காரமடைக்கு புறப்பட்டு இருக்கின்றனர். கார் முள்ளி வனத்துறை சோதனைச்சாவடி, பெரும்பள்ளம் பகுதியில் வந்துள்ளது. 

accident

ஆபத்தான வளைவு: 

அப்போது, ஆபத்தான வளைவுப்பகுதியில் திரும்பும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்துள்ளத்து. இந்த விபத்தில் காரில் இருந்த மூவரும் தூக்கி வெளியே வீசப்பட்டு படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தனர். 

மீட்புப்பணி: 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வனத்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: Thanjavur: கியாஸ் சிலிண்டர் வெடித்து நேர்ந்த சோகம்.. 3 பேர் பரிதாப பலி.!