என் புருஷன் சாகல! இன்னும் கொஞ்சம் கொடுக்கவா? கள்ளகாதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி செய்த அதிர்ச்சி செயல்! வைரலாகும் ஆடியோ!



husband-poisoned-by-wife-and-lover-dharmapuri-case

 தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல் (43), ஓட்டுநராக பணியாற்றி வந்ததுடன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல் ஊரினைச் சேர்ந்த அம்முபி (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 5 ஆம் தேதி இரவு, ரசூல் தனது வீட்டில் உணவு உண்டபின் படுக்கச் சென்றார். இரவில் இரண்டு முறை ரத்த வாந்தி ஏற்பட்டதால் உடனடியாக சேலம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனையில், அவரது உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த ரசூல், தனது மனைவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, 6 ஆண்டுகளாக அம்முபி என்பவர் லோகேஸ்வரன் (26) என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததும், “மாதுளை ஜூஸிலும் மருந்து கலந்தேன்” என்ற ஆடியோ ரெக்கார்டும் கைப்பற்றப்பட்டது.

இதையும் படிங்க: 6 வருஷங்களாக 14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கை! பெற்ற தாயே செய்ய கூடாததை மகளிடம் செய்த கொடூரம்! வெளிவந்த பகீர் உண்மை..

ரசூல் அரூர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்முபி மற்றும் லோகேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், இருவரும் ரசூலை ‘ஸ்லோ பாய்சன்’ முறையில் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், ரசூல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சண்டையில் கோபமடைந்து கணவன் மீது கொதிக்க கொதிக்க அதையெல்லாம் உடம்பில் ஊற்றிய மனைவி! இரவு முழுவதும் அறையில் பூட்டி வைத்து… கொடூர சம்பவம்!