முதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண்.! நடந்தது என்ன.? முழு விவரம்.!

முதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண்.! நடந்தது என்ன.? முழு விவரம்.!


flight-delayed-for-child-cries

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற விஸ்தாரா விமானத்தில், ஏறிய இளம் தம்பதியினிரின் குழந்தை தொடர்ந்து, அழுதுகொண்டிருந்ததால், அந்த குழந்தையின் பெற்றோர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, விமானம் புறப்பட்டுச் சென்றது. குழந்தை அழுததற்காக பயணி இறக்கிவிடப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

flight

விமானத்தில் நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்ததால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று  கைக்குழந்தையுடன் அந்த பெண் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விடுவதாக தெரிவித்தார். அதன்படி அந்த பெண் விமானத்தில் இருந்து குழந்தையுடன் இறங்கி விட்டார்.

பின்னர் அந்த விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 நிமிடங்கள் தாமதமாக மற்ற பயணிகளுடன் பகல் 12.15 மணிக்கு இந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அந்த பெண், சென்னையில் இருந்து டெல்லி சென்ற மற்றொரு விமானத்தில் கைக்குழந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.