நடுவானில் பறந்துக்கொண்டிருந்த பயிற்சி விமானம்! திடீரென ஏற்பட்ட விபத்து! தமிழகத்தை சேர்ந்த பெண் விமானி பலி!

ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. அங்குள்ள தளத்தில் தினமும் பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம். அதேபோல் நேற்று காலை சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவருமே விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.
விபத்தில் இறந்த விமானிகள் தமிழகத்தைச் சேர்ந்த அனிஷ் பாத்திமா (பயிற்சி விமானி) மற்றும் பீகாரைச் சேர்ந்த சஞ்சய் ஜா (விமானி) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு ஏற்பட்ட விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பயிற்சியின் போது ஏற்பட்ட விமான விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த அனீஷ் பாத்திமா, சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விமான நகரைச் சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்த அனீஷ் பாத்திமாவின் உடல் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.