முகநூல் நண்பரை நம்பி குளிர்பானத்தை குடித்த இளம்பெண்.! மயக்கம் தெளிந்த இளம்பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!



fb friend abused young girl

சமீபகாலமாக சமூகவலைத்தளம் மூலமாக சில பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டம் அரியத்தூர் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்ற நபருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முகநூலிலே இவர்களது பழக்கம் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த ரவீந்திரன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்துவிட்டு மயக்கமான நிலையில் இருந்த அந்த பெண்ணை ரவீந்திரன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அந்த பெண் ரவீந்திரனால்  பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரவீந்திரனை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரவீந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் ரவீந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.