வயலுக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்.. மின்கம்பியை மிதித்து பலியான பரிதாபம்..! கண்ணீரில் குடும்பத்தினர்..!!

வயலுக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்.. மின்கம்பியை மிதித்து பலியான பரிதாபம்..! கண்ணீரில் குடும்பத்தினர்..!!


farmer death by current shock

பூச்சிமருந்து அடிப்பதற்காக வயலுக்கு சென்ற விவசாயி, அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் தெற்கு கோழிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 58). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் திருவிசநல்லூர் காருடையான் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவருடன் இன்று காலை வயலுக்கு பூச்சிமருந்து அடிக்க சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் அறிவழகனின் மனைவி மீனா வயலில் பூச்சி மருந்து அடிக்கப்படுகிறதா? என்பதை காண சென்றபோது, கணேசன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

thanjavur

பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, திருவிடைமருதூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து கணேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சாதிக் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் பலியான கணேசனுக்கு பவானி என்ற ஒரு மனைவியும், 4 மகள்களும் உள்ள நிலையில், 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.