பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை... போலீசார் விசாரணை...!!

பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை... போலீசார் விசாரணை...!!


Famous rowdy strangled to death... Police investigation...

சோலையூர் அருகே, பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர் லோக நாதன் (35) இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது.

லோக நாதன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், லோக நாதன் தாழம்பூரில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த சில பேர், கொடூரமாக அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.