பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கருக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி, போலீஸ் பலத்த பாதுகாப்பு.!Fake Preacher Siva Sankar Baba Health Condition Admit Chennai Govt Stanly Hospital

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டெர்னஷ்னல் பள்ளியை நடத்தி வந்த போலிச்சாமியார் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து எழுந்தது. 

மேலும், பள்ளியில் பயின்று வந்த முன்னாள் மாணவிகள் பலரும் அடுத்தடுத்து வழங்கிய புகாரின் பேரில், வழக்கு விசாரணை விஸ்வரூபம் எடுத்து மாமல்லபுரம் காவல் துறையினர் நடத்திய விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டது. கடந்த ஜூன் 16 ஆம் தேதி டெல்லியில் வைத்து சிவஷங்கரை அதிகாரிகள் கைது செய்தனர். 

Fake Preacher

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கருக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.