என்ன நடந்தது?? பிரபல அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து நீக்கம்!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

என்ன நடந்தது?? பிரபல அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து நீக்கம்!! வெளியான அதிரடி அறிவிப்பு!!


ex-minister-terminated-from-admk

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சருமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில். கட்சியில் மிகவும் பிரபலமாக இருந்த இவர் இன்றில் இருந்து கட்சியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Politics news

 இதுகுறித்து இன்று வெளியான அறிக்கையில், "கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், டாக்டர் நிலோபர் கபீல் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.