நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
ஷாக் நியூஷ்! Everest, LG பெருங்காயத்தில் விதிமீறல்கள்.. சற்றுமுன் FSSAI அதிரடித் தடை..!!!
எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்களின் பெருங்காயத்தூள் தரம் குறித்து எழுந்த புகார்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் புகார்களின் அடிப்படையில் FSSAI நடத்திய முதற்கட்ட ஆய்வகப் பரிசோதனையில், இரு நிறுவனங்களின் கலப்பு பெருங்காயப் பொருட்களிலும் விதிமீறல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தையில் உள்ள தரமற்ற தயாரிப்புகளை திரும்பப் பெற உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எவரெஸ்ட், LG பெருங்காயத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்
ஆய்வில், எவரெஸ்ட் பெருங்காயத்தூள் தயாரிப்பில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவுகள் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. அதேபோல், LG பெருங்காயத்தூளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஸ்டார்ச் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நிறுவனங்களின் மாதிரிகளிலும் ஆல்கஹாலில் கரையக்கூடிய சாற்றின் அளவு 0 முதல் 3 சதவீதம் வரையே இருந்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி இந்த அளவு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும்.
தரமற்ற பொருட்களை திரும்பப் பெற உத்தரவு
ஆய்வகப் பரிசோதனையில் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, சந்தையில் விற்பனைக்கு இருக்கும் தரமற்ற தயாரிப்புகளை உற்பத்தியாளர்களே முன்வந்து திரும்பப் பெற வேண்டும் என FSSAI உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் குறித்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை
சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், தவறுகள் தொடர்ந்தால் இரு நிறுவனங்களின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் FSSAI எச்சரித்துள்ளது. இதனால் FSSAI ஆய்வு தொடர்பான விவகாரம், பெருங்காயத்தூள் பயன்படுத்தும் நுகர்வோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.