நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
அட அட... இது வேற லெவல் காதல் பரிசு தாங்க! மணமகளுக்காக நிலவில் நிலம் வாங்கிய நாமக்கல் மாப்பிள்ளை....! இப்படி ஒரு பரிசை பொண்ணு எதிர்பார்த்திருக்குமா..?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் அசோக் சரவணன் (32), தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமணப் பரிசை வழங்கியுள்ளார். செப்டம்பர் 17-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், ராதிகா என்ற வர்ஷினிக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ஆன்லைன் மூலம் வாங்கி பரிசாக அளித்துள்ளார். இந்த தகவல் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலம்
பொதுவாக திருமணப் பரிசாக தங்க நகைகள், கார்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக, நிலவில் இடம் வாங்கி கொடுக்க வேண்டும் என அசோக் சரவணன் முடிவு செய்துள்ளார். லண்டனில் வசிக்கும் தனது சகோதரியின் உதவியுடன் ஆன்லைனில் நிலம் தொடர்பான சான்றிதழைப் பெற்றதாக கூறப்படுகிறது.
வருங்கால மனைவிக்கு வித்தியாசமான நினைவுப் பரிசாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த உறவினர்களும் நண்பர்களும், நிலவில் நிலம் வாங்கியிருப்பது குறித்து ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.
சட்டப்படி நிலவு நிலத்தை யாரும் வாங்க முடியாது
ஆனால், இங்கு முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. நிலவில் வாங்கியதாக வழங்கப்படும் இதுபோன்ற ஆவணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. 1967-ம் ஆண்டின் Outer Space Treaty எனப்படும் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பகுதிகளை எந்த தனிநபரோ, தனியார் நிறுவனமோ அல்லது நாடோ சொந்தம் கொண்டாட முடியாது.
இணையத்தில் செயல்படும் சில வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் பணம் பெற்றுக்கொண்டு நிலவில் இடம் வாங்கியதற்கான சான்றிதழ்களை வழங்கி வருகின்றன. Lunar Registry, Lunar Embassy போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த ஆவணங்களுக்கு சர்வதேச சட்டத்திலோ இந்திய சட்டத்திலோ உரிமை அங்கீகாரம் இல்லை.
நினைவுப் பரிசாக மட்டுமே கருத முடியும்
இதனால் அசோக் சரவணன் பெற்றுள்ள சான்றிதழை நிலத்தின் உண்மையான உரிமைப் பத்திரமாக கருத முடியாது. அதிகபட்சம் அது ஒரு நினைவுச் சான்றிதழாக மட்டுமே இருக்கும். Moon Land வாங்குவது புதுமையான அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டாலும், அதற்கு எந்த சட்டப்பூர்வ சொத்து உரிமையும் கிடையாது என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்.... மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ரத்து? அதிகாரிகளிடம் அல்லேலப்படும் இல்லத்தரசிகள்!!!