நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
BREAKING: வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 4 குழந்தைகள் பரிதாப பலி..! பெற்றோர் கண்முன்னே துடிதுடித்த பிஞ்சுகள்.... திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி..!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவு பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மீது பால் வேன் மோதியது. இதில் தனுஸ்ரீ (5), மோசிகீரன் (6), அனன்யா (6), யோக வர்ஷினி (11) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோர் கண்முன்னேயே குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் அருகே விளையாடிய குழந்தைகள்
கொல்லம்பட்டி பிரிவு பகுதியில் பெற்றோர் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அங்கு வந்த பால் வேன் எதிர்பாராதவிதமாக குழந்தைகள் மீது மோதியது.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்.... மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ரத்து? அதிகாரிகளிடம் அல்லேலப்படும் இல்லத்தரசிகள்!!!
கண்முன்னே நடந்த சோகம்
வேன் மோதியதில் தனுஸ்ரீ, மோசிகீரன், அனன்யா, யோக வர்ஷினி ஆகிய 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் கண்முன்னேயே நடந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்பகுதியில் பெரும் சோகம்
விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் கொல்லம்பட்டி பிரிவு பகுதியில் சோகமான சூழல் நிலவுகிறது. பால் வேன் விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.