நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
ஐயோ... கடவுளே! இறப்பு தான் எல்லாத்துக்கும் முடிவா? கணவன், மனைவி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் RIP பதவி.. ஒட்டுமொத்த குடும்பமே பரிதாப பலி! விசாகப்பட்டினத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!
விசாகப்பட்டினம் மாவட்டம் சிந்தல அக்ரகாரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் மல்ல பிரவீன், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ‘ஆர்.ஐ.பி’ பதிவு
பிரவீன் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், அவரது மனைவி காய்கறி வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல். தற்கொலைக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ‘ஆர்.ஐ.பி’ என பதிவிட்டுள்ளனர். இதைப் பார்த்த உறவினர் ஒருவர், உடனடியாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிகொண்டிருந்த 4 வயது சிறுமி மாயம்! சிசிடிவி- யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி...!!!
இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததாக தகவல்
இதற்கிடையே, தம்பதியினர் முதலில் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நால்வரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
காரணம் குறித்து போலீசார் விசாரணை
இந்த குடும்பத்தினர் இத்தகைய முடிவை எடுத்ததற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. குடும்ப பிரச்சினையா, கடன் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குடும்ப தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
విశాఖ:
— Vizag News Man (@VizagNewsman) August 29, 2026
చింతల అగ్రహారంలో తీవ్ర విషాద ఘటన
ఒకే కుటుంబానికి చెందిన నలుగురు మృతి
మల్లా ప్రవీణ్, ఆయన భార్య, కుమార్తె, కుమారుడు మృతి చెందినట్లు సమాచారం
ఇద్దరు పిల్లలకు విషం ఇచ్చి.. తర్వాత ఉరి వేసుకుని భార్యాభర్త ఆత్మహత్య
వాట్సాప్ స్టేటస్ లో రిప్ అని మెసేజ్ పెట్టిన భార్యాభర్తలు… pic.twitter.com/zDy4jfxKVp