கர்ப்பிணி மனைவிக்கு உதவி செய்ய வந்த இடத்தில்.... டார்ச்சல் செய்த இளம்பெண்! கணவனை வளைத்து போட்ட கொடூரம்! ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி சம்பவம்!!!
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சூட்கேஸில் அடைத்து ஒடிசாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் டிரைவரான சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வீட்டு உதவியாளருடன் ஏற்பட்ட பழக்கம்
போலீசார் தெரிவித்த தகவலின்படி, போலிசெட்டி சுரேஷின் மனைவி கர்ப்பமாக இருந்ததால், வீட்டு வேலைகளுக்கு உதவ இளம்பெண் ஒருவர் பணிக்கு வந்திருந்தார். நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. பின்னர், சுரேஷின் மனைவி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தபோது, அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாக்குவாதம் கொலையாக மாறியது
இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் நடந்ததை மறைக்க திட்டமிட்ட அவர், உடலை பெரிய சூட்கேஸ் ஒன்றில் அடைத்து ரயில் மூலம் ஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதிக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
தடயங்கள் மூலம் சிக்கிய டிரைவர்
ராயகடாவில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் சூட்கேஸை வீசிவிட்டு சுரேஷ் மீண்டும் விசாகப்பட்டினம் திரும்பியுள்ளார். பின்னர் அப்பகுதியில் கிடந்த சூட்கேஸை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பின் கிடைத்த தடயங்களை வைத்து ஒடிசா போலீசார் விசாகப்பட்டினம் சென்று சுரேஷை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக இரு மாநில போலீசாரும் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலனிடம் காதலி கேட்ட அந்த ஒரு விஷயம்..! இறுதியில் சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்...! அது மூலம் சிக்கிய காதலன்! திடுக்கிடும் பின்னணி!!!