14 வயது சிறுமியுடன் பருவக்காதல்.. 18 வயது மாணவனின் முதுகில் குத்திய குடும்பம்.. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்.!

14 வயது சிறுமியுடன் பருவக்காதல்.. 18 வயது மாணவனின் முதுகில் குத்திய குடும்பம்.. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்.!


Erode Surampatty 12 th Class Student Murder Attempt Police Investigation

முன்விரோத பிரச்சனையில் காதலியான சிறுமியின் குடும்பம் குடும்பத்தோடு தலைமறைவாக, சம்பந்தமே இல்லாத அப்பாவி மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சௌந்தர். இவர் சலூன் கடையில் வேலைபார்க்கிறார். சௌந்தரின் அண்ணன் சீனிவாசன் (வயது 20). சௌந்தர் வேலைபார்த்து வரும் சலூன் கடை அருகேயே சிவா என்பவர் மருந்தகம் வைத்துள்ளார். 

இந்த மருந்தகத்தில் ஈரோடு முனியப்பன் கோவில் தெருவில் வசித்து வரும் அன்பரசு (வயது 18) என்பவர் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். அன்பரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதிநேர வேலைக்கு செல்கிறார்.

சிவாவுக்கும் - சௌந்தருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், சிவாவுக்கு ஆதரவாக அன்பரசு இருந்துள்ளார். இதனால் சௌந்தருக்கு அன்பரசுவின் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. சூரம்பட்டியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை சௌந்தர் காதலித்து வந்த நிலையில், சிறுமியின் வீட்டில் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.

erode

இதனால் சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, மகளின் எதிர்காலத்தை காப்பாற்ற அப்பகுதியில் இருந்து வீட்டினை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். இதற்கு அன்பரசே காரணம் என எண்ணிய சௌந்தர், தகவலை தனது அண்ணன் சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நேரத்தில் சீனிவாசன், சௌந்தர், இவர்களின் தாய் லதா, சௌந்தரின் நண்பர் ராம் ஆகியோர் அன்பரசுவிடம் சிறுமியின் குடும்பத்தார் வீடு மாறி சென்றது தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சீனிவாசன் அன்பரசுவின் முதுகில் குத்தியுள்ளார். 

இரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பரசு அலறியபடி மயங்கி விழ, இதனைக்கண்டு பொதுமக்கள் திரண்டுள்ளனர். சுதாரித்த கும்பல் தப்பி ஓடிவிடவே, அன்பரசை மீட்ட மக்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக சூரம்பட்டி காவல் துறையினருக்கும் தகவல் தெரியவரவே, மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் அன்பரசுவின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு, அவருக்கு சிகிச்சை அழிக்கப்படுவதை உறுதி செய்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லதாவை கைது செய்துள்ளனர். பிறருக்கு வலைவீசப்பட்டுள்ளது.