ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு.. சுதாரித்த பயணியால் 40 பேர் உயிர் பிழைப்பு.. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்.!
பேருந்து பயணத்தின் போது ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட, பயணி சுதாரிப்புடன் செயல்பட்டு அனைவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.
சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூருக்கு அரசு பேருந்து இன்று பயணம் செய்தது. பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தின் ஓட்டுநராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், பேருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லும் போது, ஓட்டுநர் பாலகிருஷ்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்தை இயக்கியவாறு வலிப்பு ஏற்பட்டதால், ஓட்டுனரின் கட்டுப்பாடு இன்றி பேருந்து இயங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர், விரைந்து செயல்பட்டு பேருந்து மிதமான வேகத்திற்கு சென்றதும் சென்டர் மீடியனில் அதனை மோதி நிறுத்தி இருக்கிறார்.
பேருந்துக்கு பின்புறம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனமும் குறிப்பிட்ட தூர இடைவெளியில் பயணம் செய்து வந்த நிலையில், விபத்தை கண்டும் காவல் கண்காணிப்பாளர் விரைந்து செயல்பட்டு ஓட்டுனரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், லேசான காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பேருந்தில் பயணம் செய்த பயணி சுதாரிப்புடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Advertisement
Advertisement