ஓட்டு மெஷினை யார் நெருங்கினாலும் எதுவும் செய்ய முடியாது.! அடித்து கூறும் தேர்தல் அதிகாரி.!
ஓட்டு மெஷினை யார் நெருங்கினாலும் எதுவும் செய்ய முடியாது.! அடித்து கூறும் தேர்தல் அதிகாரி.!

2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் நாள் அன்று வாக்கு பதிவு முடிந்தவுடன், மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழகத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனால் சமீப தினங்களாக மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களை ஊடுருவ முயற்சிப்பதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்து குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், வரும் மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகளே இல்லை. ஏனென்றால் வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது. அதற்கான வாய்ப்புகளும் குறைவு. அது கால்குலேட்டர் போல் தான் செயல்படும்.எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது என தெரிவித்தார்.