தேர்தல் பிரச்சாரத்தில் நீங்க என்ன சீரியல் பார்க்கறீங்க? மக்களிடம் கேட்ட கார்த்தி சிதம்பரம்! அதிலும் முதல் இடம் பிடித்த சீரியல்!
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.
பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மக்கள் முன்னிலையில் பேசிய அவர், பெண்களை பார்த்து அனைவரும் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நாடகம் லகஷ்மி ஸ்டோர்ஸா அல்லது கல்யான வீடா? என்று கேள்வி கேட்டார். உடனே அதற்கு மக்கள் அனைவரும் ’செம்பருத்தி’ என்று பதில் கூறினர். இதனையடுத்து அந்த நாடகத்தில் யாரை பிடிக்கும் வனஜாவா?, கிரீஜாவா? என்று கேட்டார். எங்களுக்கு கார்த்தி தான் பிடிக்கும் என மக்கள் கூறியுள்ளனர்.