இனிய செய்தி ஏப்ரல்-18 பொது விடுமுறை; வெளியானது தமிழக அரசின் அரசாணை.!

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற மன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வியாழக்கிழமையான அன்று விடுமுறை அளிக்கப்படுமா இல்லையா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளித்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.