தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ ரிலீஸ்?… நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த முக்கிய தகவல்!
இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது!! தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை கட்டாயம்
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்ய இ-பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும், நூற்று கணக்கான மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடைமுறைகளை கையாண்டுவருகிறது.
அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் வரும் மே 24 ஆம் தேதிமுதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகள், நிறுவனங்கள் என பெரிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றுமுதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது.
இன்று முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணம் செய்வோர், திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு அல்லது வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org/#/user/pass இணையதளத்தில் இ-பதிவு செய்வது அவசியம் எனவும், அந்த பதிவை ஆதாரமாக வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, பொதுமக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.