போதை தந்த வீரம்.. வீணாக வம்பிழுத்து இளைஞரை சடலமாக்கிய எமபாதகர்கள்.. ஆன்மீக பூமியில் அரங்கேறிய பெருங்கொடூரம்.!
மொட்டை மாடியில் உறங்கிய இளைஞரை தூக்கி வீசி கொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுகுடித்தார்:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, பி. குயிலம் கிராமத்தில் வசித்து வருபவர் கொங்கு. இவர் விவசாயி ஆவார். இவரின் மகன்கள் ஆகாஷ் (வயது 25), துரை (வயது 23). ஜூன் 21ம் தேதி ஆகாஷ் பெருங்கொளத்தூரில் செயல்படும் டாஸ்மாக்கில் மதுவாங்கிவிட்டு, காலி இடத்தில் அதனை குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க: 'பானி கொடுங்க' தண்ணீர் கேட்டு பெண்ணிடம் அத்துமீற முயற்சி.. வடமாநில இளைஞர் அடித்தேகொலை.!
வீட்டுக்கு அழைத்தார்:
அப்போது, அதே கிராமத்தில் வசித்து வந்த சிவா (வயது 22), ராஜேஷ் (வயது 25), அசோக் (வயது 26) ஆகியோர் மதுபானம் வாங்கிவிட்டு வந்து, ஆகாஷுக்கு அருகில் இருந்து குடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வைத்த துரை சகோதரர் ஆகாஷை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
போதை தகராறு:
சிவா, ராஜேஷ், அசோக் ஆகியோர் போதையில் இருந்த நிலையில், நீ எதற்காக அவனை கூப்பிடுகிறாய்? என கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு கைகலப்பாக மாற, துறையை மூவரும் தாக்கியுள்ளனர். ஆகாஷ் இதனை தடுக்க முயன்றபோது, அவரும் தாக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இரவு சுமார் 9 மணியளவில் சிவா, ராஜேஷ், அசோக் ஆகியோர் துரையின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளனர்.
தலையில் காயம்:
அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்க, நள்ளிரவில் வீட்டுக்கு வந்தவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு தூங்கிக்கொண்டு இருந்த துறையை சரமாரியாக தாக்கி, மாடியில் இருந்து தூக்கி வீசி இருக்கின்றனர். துரை அலறியபடி கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். இதனால் குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அகவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவா, ராஜேஷ், அசோக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மதுபோதை தகராறால் துள்ளத்துடிக்க பலியான இளைஞர்.. நண்பர்கள் அரங்கேற்றிய வெறிச்செயலால் சோகம்.!