இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. செங்கல்பட்டில் ஷாக்.!
இருவர் கும்பலால் 14 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயது சிறுமி:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தில், 14 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செயல்படும் பள்ளியில் பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!
பாலியல் வன்கொடுமை:
இதனிடையே, சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதைக்காக சென்றதாக தெரியவருகிறது. அப்போது, சிறுமியை கடத்திச் சென்ற இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கடத்திச்சென்று துயரம்:
சிறுமியை கடத்தும்போது அவர் சத்தமிடாமல் இருக்க வாயில் துணியை வைத்து பொத்தி வன்கொடுமை துயரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, வீட்டுக்கு வந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
இருவர் கைது:
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதி செய்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், சிறுமியை வன்கொடுமை செய்ததாக மகேஸ்வரன் (வயது 20), அஜய் (வயது 27) ஆகியோரை கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காவல் நிலையத்தில் உடனடி புகார் அளிக்கவும்..
அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறைக்கு 100ல் தொடர்பு கொள்ளவும்..
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!