பழிக்குப் பழி.. ஜாமீனியில் வெளிவந்த ஓட்டுநர் ஓட ஓட வெட்டி படுகொலை.!

பழிக்குப் பழி.. ஜாமீனியில் வெளிவந்த ஓட்டுநர் ஓட ஓட வெட்டி படுகொலை.!


Driver killed in nellai

நெல்லையில் ஜாமீனில் வெளிவந்த ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் கணேசன் (வயது 38). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு தனது மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

nellai

அப்போது கணேசனை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் திடீரென வழிமறித்து கொலை முயற்சி செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு வயல்வெளியில் ஓடியுள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம கும்ப கும்பல் சரமாரியாக வெட்டியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கணேசனின் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்ததில் பழிக்கு பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

nellai

அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவில் மாரியம்மாள் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணேசன் கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.