"அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் பார்ப்போம்..." இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!!



driver-commits-suicide-by-jumping-into-train-emotional

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின் புத்தூர் ரயில்வே பீடர் ரோடு நகரைச் சேர்ந்தவர் ரவிபாண்டியின் மகனான  சக்தி கணேஷ் வயது (20). இவர் ஆக்டிங் டிரைவர் மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலை சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் அருகிலுள்ள மந்தித்தோப்பு செல்லும்  சாலையின் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் சக்தி கணேஷின் உடல் சிதறிய நிலையில் கிடந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணையில், காதல் தோல்வி காரணமாக  சக்தி கணேஷ் நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் கருதினர். அவர் இறப்பதற்கு முன் தனது நண்பருக்கு அனுப்பிய ஆடியோ செய்தியில், "அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் பார்ப்போம்" என்று கூறியுள்ளார். மேலும் தண்டவாளத்தில் தன்னை வந்து பார்க்கும்படி கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

tamilnadu

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவத்தில் சக்தி கணேஷ் என்ற நபர் கொலை செய்து அவரது உடல் தண்டவாளத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. அந்த வழக்கில் கொலை செய்தது அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் தான் என்றும் இந்த சக்தி கணேஷ் வழக்கில் அவ்வாறு இல்லாது தற்கொலையாக மட்டுமே இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் பயங்கரம்... "இரவில் வந்த காதலன்..." சடலமாக மீட்கப்பட்ட திருநங்கை.!!

இதையும் படிங்க: அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம்! எல்லாம் முடிந்துவிட்டது... நண்பனுக்கு உருக்கமான ஆடியோ மெசேஜ் அனுப்பி இளைஞர் எடுத்த விபரீத முடிவு!