மது கிடைக்காத விரக்தி! கிணற்றுக்குள் இறங்கி ரகளை செய்த குடிமகன்! போராடிய தீயணைப்பு வீரர்கள்.!

மது கிடைக்காத விரக்தி! கிணற்றுக்குள் இறங்கி ரகளை செய்த குடிமகன்! போராடிய தீயணைப்பு வீரர்கள்.!


Drink addict man issues

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகள், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இயங்குகின்றன. 

சமூக விலகலுக்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனால் மது அருந்தும் பலர் மதுக்கடை எப்போது திறக்கப்படும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில்சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த மணவாளன் என்பவர் கட்டிடத்தொழிலாளியாக இருந்துள்ளார். இவர் குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த ஒரு வாரமாக மதுபானம் கிடைக்காமல் கடும் விரக்தியில் இருந்துள்ளார்.

drink

இந்தநிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் குழாய் வழியாக இறங்கினார். பின்னர் கிணற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் நின்று கொண்டு, எனக்கு உடனடியாக மதுபானம் வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் எப்படியோ ஒரு மதுபாட்டில் வாங்கி வந்து கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் அனுப்பினர். அதை வாங்கி ராவாக குடித்து விட்டு மீண்டும் மதுபானம் வேண்டும் என்று கூறி மேலே வராமல் அடம்பிடித்துள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி கிணற்றுக்குள் இறங்கி மணவாளனை மீட்க முயன்றனர். அப்போது அவர் தீயணைப்பு படை வீரர்களை தாக்கி அவர்களது கையை கடித்து, ரகளையில் ஈடுபட்டுள்ளார். கடும் போராட்டத்துக்கு பின் அவரை தீயணைப்பு வீரர்கள் சமாதானப்படுத்தி பாதுகாப்பாக கிணற்றில் இருந்து பத்திரமாக மேலே மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.