அமைச்சர் ஜெயக்குமார் படுதோல்வி.! கெத்து காட்டிய திமுக.!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை


dmk win jayakumar constitution

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், திமுக 160 இடங்களில் முன்னிலையிலும், அதிமுக 74 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. 

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமார் 27,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தியிடம் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியடைந்தார். 20 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஐ டீர்ம்ஸ் மூர்த்தி 63,811 வாக்குகளை பெற்றார். 

அமைச்சர் டி.ஜெயக்குமார் 36,224 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுகவில் ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி, மா பா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.