அடுத்த சீன் இதுதானா? டாக்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிறக்கடிக்க ஆசை மீனா!
அதிமுக, அமமுக வில் இருந்து திமுகவிற்கு சென்று கெத்துக்காட்டிய சட்டமன்ற உறுப்பினர்!!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின் படி பாஜக கூட்டணி 350 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 92, மற்றவை 100 இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளன.
நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று அமமுகவிற்கு சென்று பின்னர் அங்கிருந்து திமுகவிற்கு சென்ற செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.