தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டம் சிறுமி குடும்பத்திற்கு திமுக 5 லட்சம் நிதியுதவி!

Summary:

dmk give 5 laksh for pudukottai child family

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக  ராஜேஷ் என்ற 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்ட நிதியுதவி தொகையாக அவரின் குடும்பத்திற்கு 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்தார். மேலும், சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை சிறுமி கொலை ...

இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நேரில் சென்று சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களிடம் ரூ. 5 லட்சம் தொகையை ரொக்கமாக வழங்கினர்.


Advertisement